அதியமான் வேளாண் கல்லுாரி 2ம் ஆண்டு பட்டமளிப்பு விழா
அதியமான் வேளாண் கல்லுாரி 2ம் ஆண்டு பட்டமளிப்பு விழாஓசூர்,:கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே அத்திமுகம் அதியமான் வேளாண்மை கல்லுாரியில், 2ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது. அதியமான் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் தலைவர் பானுமதி தம்பிதுரை மற்றும் அறங்காவலர் லாசியா தம்பிதுரை தலைமை வகித்தனர். கல்லுாரி முதல்வர் ஸ்ரீதரன் வரவேற்றார்.கேரள முன்னாள் வருமான வரித்துறை தலைமை இயக்குனர் ஆல்பர்ட் ஜி.ஜோதிமணி ஆகியோர் பேசினர். தொடர்ந்து கல்லுாரியின் செய்தி மடல் வெளியிடப்பட்டது. தமிழ்நாடு வேளாண் பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி, 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்கி பேசினார். விழாவில், 2017 - 18ம் கல்வியாண்டில், கல்வியில் சிறந்து விளங்கி முதல் மதிப்பெண் பெற்ற மாணவன் நவீன்குமார் மற்றும் மாணவி ஹரிணி ஜெயா ஆகியோருக்கு, தம்பிதுரை விருதும், 6,000 ரூபாய், 2ம் மதிப்பெண் பெற்ற தீப்திகா மற்றும் கீதாஞ்சலி ஆகியோருக்கு, பானுமதி தம்பிதுரை விருதும், 4,000 ரூபாய், கல்வி, விளையாட்டு, கலை நிகழ்ச்சிகளில் சிறப்பாக செயல்பட்ட லாவண்யா மற்றும் அஜீசா ஆகியோருக்கு, லாசியா தம்பிதுரை விருதும் மற்றும் 5,000 ரூபாய் வழங்கினர்.