சாலையை சேதப்படுத்தும் லாரிகள் சிறைபிடித்து மக்கள் போராட்டம்
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், ஏர்ரபையனஹள்ளி பஞ்., கெட்டுஹள்ளி பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்-தினர் வசிக்கின்றனர். அதே பகுதியில், அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. மேலும், தனியாருக்கு சொந்தமான, கல்குவாரிகளுக்கு பயன்படுத்தும் வெடிமருந்து கிடங்கு ஒன்று உள்ளது. அப்பகுதி கிராம சாலைகள் வழியாக, வெடி மருந்து ஏற்றி செல்லும் லாரிகள் அதிகளவில் சென்று வருகின்றன. இதனால் அப்பகுதி சாலைகள் சேதமடைந்து ஜல்லி பெயர்ந்து, பயன்படுத்த முடியாத நிலையில் சாலை உள்ளது. இது குறித்து, சம்பந்தப்பட்ட வெடி மருந்து நிறுவன உரிமையா-ளரிடம் சாலையை சீரமைத்து கொடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும் கண்டு கொள்ளப்படவில்லை. ஆத்திரம-டைந்த மக்கள் நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு அவ்வழியாக, வெடி மருந்து ஏற்றி வந்த, 2 ஈச்சர் லாரி மற்றும் 2 பிக்கப் வாக-னங்களை சிறை பிடித்தனர். அங்கு வந்த பென்னாகரம் எஸ்.ஐ., கருணாநிதி, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தார். அப்போது, வெடி மருந்து கிடங்கு உரிமையாளரின் உறவினர், வாகனத்தை சிறைபி-டித்த பொதுமக்களிடம் வாக்குவாதம் செய்ததால், இரு தரப்-புக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து, போலீசார் பேச்சு-வார்த்தைக்கு பின், 9:30 மணிக்கு வாகனங்களை விடுவித்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.