உள்ளூர் செய்திகள்

இரு பெண்கள் மாயம்

இரு பெண்கள் மாயம்கிருஷ்ணகிரி, டிச. 29-கிருஷ்ணகிரி அடுத்த பையனப்பள்ளியை சேர்ந்தவர் ரஹமத், 25. கடந்த, 4 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி விவாகரத்து பெற்றவர். நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து ரஹமத்தின் தந்தை அளித்த புகார் படி கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர். பர்கூர் அருகில் உள்ள பகுதியைச் சேர்ந்தவர், 16 வயது, பிளஸ் 1 மாணவி. கடந்த, 20ல், பள்ளிக்கு செல்வதாக கூறிச்சென்றவர் மாயமானார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து மாணவியின் பெற்றோர் பர்கூர் அனைத்து மகளிர் போலீசில் புகாரளித்தனர். அதில், தர்மபுரி மாவட்டம், எஸ்.கொட்டாவூரை சேர்ந்த ஸ்ரீராம், 21, என்ற வாலிபர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதன்படி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை