டாஸ்மாக்கில் முதல்வர் படம்பா.ஜ.,வினர் போராட்டம்
டாஸ்மாக்கில் முதல்வர் படம்பா.ஜ.,வினர் போராட்டம்பாலக்கோடு:பாலக்கோட்டில், பா.ஜ., மகளிரணி மாவட்ட தலைவி சங்கீதா தலைமையில், டாஸ்மாக் கடையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் புகைப்படம் ஒட்டும் போராட்டம் நேற்று நடந்தது. அரசு டாஸ்மாக் கடைகளில், 1,000 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் செய்த, தி.மு.க., அமைச்சர் செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஊழல் குறித்து, கண்டுகொள்ளாத தமிழக முதல்வர் ஸ்டாலினை கண்டித்து, பா.ஜ., மகளிரணி சார்பில், பாலக்கோடு தக்காளி மார்க்கெட் அருகிலுள்ள அரசு டாஸ்மாக் கடை எண், 2837 மற்றும் திருமால்வாடி மாந்தோப்பு பின்புறமுள்ள டாஸ்மாக் கடை எண், 2885 ஆகிய இரு கடைகளில், 'போதையின் பாதையில் செல்லாதீர்கள் அப்பா' என்ற வாசகம் அடங்கிய முதல்வர் புகைப்படத்தை கடை முன் ஒட்டினர். இதில், பா.ஜ., நிர்வாகிகள் பெரியசாமி, வேலு, வித்தியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.