உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஆதார் புதுப்பிக்கும்சிறப்பு முகாம் தொடக்கம்

ஆதார் புதுப்பிக்கும்சிறப்பு முகாம் தொடக்கம்

ஆதார் புதுப்பிக்கும்சிறப்பு முகாம் தொடக்கம்கரூர்:கரூர் மாவட்டத்தில், தபால் நிலையங்களில் மாணவர்கள், ஆதார் அட்டையில் பயோ மெட்ரிக் விபரங்களை, புதுப்பிக்கும் சிறப்பு முகாம் நேற்று தொடங்கியது.இது குறித்து, கரூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தமிழினி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:கோடை விடுமுறையை பயனுள்ளதாக்கி கொள்ள, மாணவர்கள் ஆதார் அட்டையில் பயோ மெட்ரிக் விபரங்களை புதுப்பித்து கொள்ள நேற்று முதல் வரும், 30 வரை தபால் நிலையங்களில் சிறப்பு முகாம் தொடங்கியுள்ளது. ஆதார் விதிமுறைப்படி, ஐந்து மற்றும், 15 வயதை கடந்த பள்ளி மாணவர்கள் தங்களின் கைரேகை மற்றும் தற்போதைய புகைப்படம் உள்ளிட்ட, பயோ மெட்ரிக் தகவல்களை புதுப்பிப்பது அவசியமானது. இதற்கு கட்டணம் இல்லை. மாணவர்கள் புதுப்பிப்பது மூலமாக அரசு உதவி திட்டம், வங்கி சேவை, கல்வி சலுகைகளுக்கு பயனுள்ளதாக அமையும்.கரூர் மாவட்டத்தில், 33 ஆதார் சேவை மையங்கள் இயங்கி வருகின்றன. இந்த சேவை கரூர், குளித்தலை தலைமை தபால் நிலையங்களில் காலை, 8:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை, ஞாயிறு உள்பட அனைத்து நாட்களிலும் செயல்படுத்தப்படும். இந்த சேவையை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ