உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஓரணியில் தமிழ்நாடு விழிப்புணர்வு பிரசாரம்

ஓரணியில் தமிழ்நாடு விழிப்புணர்வு பிரசாரம்

ஓசூர், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, தி.மு.க., மாணவரணி சார்பில், ஓரணியில் தமிழ்நாடு பிரசாரத்தை, மாணவ, மாணவியர் மத்தியில் கொண்டு செல்லும் விழிப்புணர்வு பிரசாரம் துவக்க விழா, ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முன் நேற்று நடந்தது. மாவட்ட மாணவரணி அமைப்பாளர் கண்ணன் தலைமை வகித்தார்.ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், மாநகர மேயர் சத்யா ஆகியோர், மாணவ, மாணவியருக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி, விழிப்புணர்வு பிரசாரத்தை துவக்கி வைத்தனர். துணை மேயர் ஆனந்தய்யா, வரி விதிப்பு குழு தலைவர் சென்னீரப்பா, மாநகர துணை செயலாளர் கோபாலகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை