மேலும் செய்திகள்
அங்கன்வாடி ஊழியர் ஆர்ப்பாட்டம்
22-Aug-2025
கிருஷ்ணகிரி, அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில், கருப்பு சேலை அணிந்து, நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மொபைல் போனில் தரவுகளை சேகரிக்க அல்லல்படும் அங்கன்வாடி ஊழியர்களின், இ.கே.ஒய்.சி., ஓ.டி.பி., எப்.ஆர்.எஸ்., முறையை கைவிடக்கோரி, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில், அகில இந்திய கருப்பு தின ஆர்ப்பாட்டங்கள் நேற்று மாலை நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தளி, ஓசூர், கெலமங்கலம், சூளகிரி, வேப்பனஹள்ளி, பர்கூர், ஊத்தங்கரை, மத்துார், காவேரிப்பட்டணம் ஆகிய ஒன்பது ஒன்றியங்களில், வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு நடந்தது.ஆர்ப்பாட்டத்தில், மைய பணிகளை செய்வதற்கு புதிய, 5ஜி மொபைல் போன், சேவைக்கான, 5ஜி சிம் கார்டு, மையங்களில் வைபை இணைப்பு வழங்க வேண்டும். இ.கே.ஒய்.சி., ஓ.டி.பி., மற்றும் எப்.ஆர்.எஸ்., முறையை கைவிட வேண்டும். போஷன் டிராக்கரில் செய்யும் பணிகளுக்கு ஊக்கத்தொகை, 5,000 ரூபாய் கூடுதலாக வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர்கள், பயனாளர்களின் தரவுகளை பதிவு செய்ய சொல்லி கட்டாயப்படுத்துவதை தவிர்க்க வேண்டும், என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கருப்பு சேலை அணிந்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
22-Aug-2025