உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களுக்கு ரூ.5.50 லட்சத்தில் பகுப்பாய்வு கருவிகள்

பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களுக்கு ரூ.5.50 லட்சத்தில் பகுப்பாய்வு கருவிகள்

பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களுக்கு ரூ.5.50 லட்சத்தில் பகுப்பாய்வு கருவிகள்கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரியில், 10 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு, 5.50 லட்சம் ரூபாய் மதிப்பில், பகுப்பாய்வு கருவிகளை, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வழங்கினார்.கிருஷ்ணகிரி ஆவின் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தில், மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் நேற்று ஆய்வு மேற்கொண்டார். கிருஷ்ணகிரி ஆவினில் கொள்முதல் செய்யப்பட்ட பால் வரத்து, பால் பதப்படுத்தும் பணிகள், நெய், பால்கோவா, குல்பி, பாதாம் பவுடர், வெண்ணை, மோர், பால் பாக்கெட் தயாரிக்கும் பணிகள் மற்றும் தரக்கட்டுபாடு பணிகளை பார்வையிட்டு விபரங்களை கேட்டறிந்தார். அப்போது, கிருஷ்ணகிரி ஆவினில் நாள்தோறும், 90,000 லிட்டர் பால் வரத்து உள்ள நிலையில் உள்ளூர் விற்பனையாக, 26,500 லிட்டரும், 5,-000 லிட்டர் பால் உபபொருட்கள் செய்யவும், 58,500 லிட்டர் பால் சென்னைக்கு நாள்தோறும் அனுப்பப்பட்டு வருகிறது என, அலுவலர்கள் கூறினர். தொடர்ந்து, என்.பி.டி.டி., திட்டத்தில், 10 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு தலா, 55,000 ரூபாய் மதிப்பில், 5.50 லட்சம் ரூபாய் மதிப்பில் பகுப்பாய்வு கருவிகளை, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வழங்கினார். ஆவின் பொது மேலாளர் சுந்தரவடிவேல், விற்பனை பிரிவு மேலாளர் ஐங்கரன் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள்உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ