உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / டோல்கேட்டில் முற்றுகை போராட்டம்; 9 பேர் கைது

டோல்கேட்டில் முற்றுகை போராட்டம்; 9 பேர் கைது

டோல்கேட்டில் முற்றுகை போராட்டம்; 9 பேர் கைதுகிருஷ்ணகிரி:தமிழகத்தில் மொத்தமுள்ள, 78 டோல்கேட்களில், கடந்த ஏப்.,1 முதல், 40 டோல்கேட்களில் கட்டணம் உயர்த்தப்பட்டது. வரும் செப்.,1 முதல், மீதமுள்ள டோல்கேட்களில் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது. கடந்த ஏப்., 1 முதல் கிருஷ்ணகிரி டோல்கேட்டிலும் வாகனங்களுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டது.இதை கண்டித்து நேற்று மாலை கிருஷ்ணகிரி டோல்கேட் அருகில் புதிய பாரதம் கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வினோத் தலைமையில் நடந்த போராட்டத்தில், டோல்கேட் கட்டண உயர்வை கண்டித்து கோஷம் எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட வினோத் உள்பட நிர்வாகிகள் ஒன்பது பேரை கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி