மேலும் செய்திகள்
இருவேறு விபத்தில் 2 பேர் பலி
08-Aug-2024
ஓசூர்: சாலையை கடந்த போது, பைக் மோதி பா.ம.க., நிர்வாகி பலியானார்.கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே பெரிய சப்படி கிராமத்தை சேர்ந்தவர் ஹரிஸ், 38. பா.ம.க., இளைஞரணி மத்திய மாவட்ட துணை செயலாளர். இவர் தனியார் நிறுவனத்திற்கு, டிராக்டர் மூலம் தண்ணீர் சப்ளை செய்யும் வேலை செய்து வந்தார். குருபராத்தப்பள்ளி பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில், நேற்று முன்தினம் இரவு நடந்த உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு, நேற்று அதிகாலை, 1:00 மணிக்கு வீட்டிற்கு பஜாஜ் பல்சர் பைக்கில் ஹெல்மெட் அணியாமல் சென்றார்.திருமண மண்டபம் எதிரே, தேசிய நெடுஞ்சாலையை கடந்த போது, ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த மகாராஷ்டிரா பதிவு எண் கொண்ட, சுசூகி சூப்பர் ரேஸ் பைக், பல்சர் பைக் மீது மோதியது. இதில் துாக்கி வீசப்பட்ட ஹரிஸ், சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்தை ஏற்படுத்திய நபர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை. சூளகிரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
08-Aug-2024