விவசாயிகள் கலந்துரையாடல்
விவசாயிகள் கலந்துரையாடல்ஓசூர், : ஓசூர் அருகே உளியாளத்தில், விவசாயிகள் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி தலைமை வகித்தார். தேசிய தோட்டக்கலை வாரிய இயக்குனர் பாலசிவப்பிரசாத் பேசும் போது, வாழை மற்றும் பூக்கள் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், திசு வளர்ப்பு தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படும் நோயற்ற தரமான நாற்றுகளை பயன்படுத்தி, விவசாயிகள் இரட்டிப்பு லாபம் பெறலாம் என்றும், தோட்டக்கலைத்துறையிலுள்ள அரசின் மானிய திட்டங்கள் குறித்தும், விவசாயிகளுக்கு விளக்கினார். இதில், 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். முன்னோடி விவசாயிகளுக்கு விருது வழங்கப்பட்டது. மேலும், சர்வதேச வாழை விஞ்ஞானி இளையபாலன், சங்கர் பயோடெக் நிறுவனர் சங்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.