கோவில்மலையடிவாரத்தில் தீ
கோவில்மலையடிவாரத்தில் தீஓசூர்,:ஓசூர் இன்னர் ரிங்ரோட்டில், பா.ஜ., மேற்கு மாவட்ட அலுவலகம் பின்புறத்தில், ஓசூர் மரகதாம்பாள் உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவில் மலை அடிவாரம் உள்ளது. இப்பகுதியில் செடி, கொடிகள், புற்கள் மற்றும் மரங்கள் அதிகளவில் வளர்ந்துள்ளன. கடும் வெயிலுக்கு புற்கள் காய்ந்துள்ள நிலையில், நேற்று மதியம் தீப்பிடித்தது. கடும் புகை வெளியேறிய நிலையில், ஓசூர் தீயணைப்புத்துறையினர் வந்து போராடி தீயை அணைத்தனர்.