மேலும் செய்திகள்
மாணவர்களுக்கு மாதிரி தேர்வு
11-Mar-2025
மாணவ, மாணவியருக்கு இனிப்புஓசூ:தமிழக பட்ஜெட்டில், கல்லுாரி மாணவ, மாணவியருக்கு, 20 லட்சம் லேப்டாப் மற்றும் கை கணினி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, தி.மு.க., மாணவரணி அமைப்பாளர் கண்ணன் தலைமையில், ஓசூர் அரசு கலை அறிவியல் கல்லுாரி மற்றும் தனியார் கல்லுாரி மாணவ, மாணவியருக்கு, நேற்று இனிப்பு வழங்கப்பட்டன. அப்போது, அரசு அறிவித்த பல்வேறு திட்டங்கள் குறித்து மாணவ, மாணவியருக்கு எடுத்துரைக்கப்பட்டது.மாநகராட்சியில் மேயர் ஆய்வுஓசூ:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி, 28வது வார்டுக்கு உட்பட்ட சென்னத்துார், ஹனி ஹோம்ஸ் ஆகிய பகுதிகளில், மாநகர மேயர் சத்யா ஆய்வு செய்தார். அப்போது, சென்னத்துார் மாநகராட்சி துவக்கப்பள்ளியில், புதிய வகுப்பறை கட்டி தர வேண்டும். சூடசந்திரம் பகுதியில் மழைநீர் வடிகால் அமைத்து தர வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதையேற்று, உரிய நடவடிக்கை எடுக்க, மாநகராட்சி அலுவலர்களுக்கு மேயர் அறிவுறுத்தினார். மாநகராட்சி ஊழியர்கள் உடனிருந்தனர்.
11-Mar-2025