உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பசு மாடு மர்மச்சாவு

பசு மாடு மர்மச்சாவு

பசு மாடு மர்மச்சாவுஊத்தங்கரை:ஊத்தங்கரை அடுத்த, கொட்டுக்காரம்பட்டியை சேர்ந்தவர் ஜெயராமன், 54, விவசாயி. இவர், தன் விவசாய நிலத்தில் மூன்று பசு மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை, பசு மாடுகளை தன் விவசாய நிலத்திலுள்ள கொட்டகையில் கட்டி வைத்து விட்டு, வீடு திரும்பினார். நேற்று காலை சென்று பார்த்தபோது பசுமாடு இறந்து கிடந்தது. அதிர்ச்சியடைந்த அவர் கால்நடை மருத்துவர் ரகுபதிக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவர் இறப்பிற்கான காரணம் குறித்து ஆய்வு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி