மேலும் செய்திகள்
எருதுவிடும் விழா10 பேர் மீது வழக்கு
04-Mar-2025
எருது விடும் விழா6 பேர் மீது வழக்கு
10-Mar-2025
எருது விடும் விழா15 பேர் மீது வழக்குகிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி அடுத்த மரிக்கம்பள்ளியில் கடந்த, 23ல் அனுமதியின்றி எருது விடும் விழா நடந்ததாக மரிக்கம்பள்ளி வி.ஏ.ஓ., முனியப்பன் அளித்த புகார் படி, கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் மல்லன், ராமன் மற்றும் மூவர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.காவேரிப்பட்டணம் அடுத்த பந்தேரியில் நேற்று முன்தினம் அனுமதியின்றி எருது விடும் விழா நடத்தியதாக சாப்பர்த்தி வி.ஏ.ஓ., சதீஷ்குமார் புகார் படி, காவேரிப்பட்டணம் போலீசார் முருகேசன், முருகன், சின்னராஜ், மணி ஆகிய, 4 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். அதேபோல வேப்பனஹள்ளி அடுத்த பெரிய சூலாமலையில் அனுமதியின்றி எருது விடும் விழா நடத்தியதாக சுப்பிரமணி, மாரப்பன், வேணுகோபால், ராமகிருஷ்ணன், பைரப்பா, சிவா ஆகிய, 6 பேர் மீது வேப்பனஹள்ளி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
04-Mar-2025
10-Mar-2025