உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தரமான விதை விற்பனை செய்ய வேளாண் அலுவலர் வேண்டுகோள்

தரமான விதை விற்பனை செய்ய வேளாண் அலுவலர் வேண்டுகோள்

தரமான விதை விற்பனை செய்யவேளாண் அலுவலர் வேண்டுகோள்கிருஷ்ணகிரி, செப். 17-தரமான விதைகளை விற்பனை செய்ய, கிருஷ்ணகிரி விதை பரிசோதனை நிலைய வேளாண் அலுவலர் லோகநாயகி கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நெல் நடவு செய்ய நாற்றங்கால் தயாரிக்கும் பணியை, விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். எனவே, விதை விற்பனையாளர்கள் தரமான நெல் விதைகளை விவசாயிகளுக்கு வினியோகம் செய்ய வேண்டும். விதை விற்பனையாளர்கள், தாங்கள் விற்பனை செய்யும் விதைக்குவியல்களின் தரமறிந்து, விற்பனை செய்ய வேண்டும். விதை உற்பத்தியாளர்கள் அல்லது மொத்த விற்பனையாளர்களிடமிருந்து விதை கொள்முதல் செய்யும்போது, விற்பனை பட்டியல்களுடன், விதை முளைப்புத்திறன் பகுப்பாய்வு அறிக்கையும் கேட்டு பெற வேண்டும். பகுப்பாய்வு அறிக்கை பெறாத விதை குவியல்களில் இருந்து, பணி விதை மாதிரி எடுத்து ஒரு பணி விதை மாதிரிக்கு, கட்டணமாக, 80 ரூபாயை செலுத்தி, விதைகளின் தரத்தை அறிந்து கொள்ள, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும், விதை பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பி பகுப்பாய்வு அறிக்கையை பெறலாம்.இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை