உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பல்நோக்கு மைய கட்டடம் திறப்பு

பல்நோக்கு மைய கட்டடம் திறப்பு

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே அச்செட்டிப்பள்ளி பஞ்.,க்கு உட்பட்ட சூதாளம் கிராமத்தில் ரேஷன் கடை இல்லாததால் மக்கள் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து, கனிமங்களும், குவாரிகளும் திட்ட நிதியில் இருந்து, 6 லட்சம் ரூபாய் மதிப்பில், பல்நோக்கு மையம் கட்டப்பட்டுள்ளது. இதை ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் நேற்று திறந்து வைத்து, பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார். துணை மேயர் ஆனந்தய்யா, தி.மு.க., ஒன்றிய செயலர் கஜேந்திரமூர்த்தி, மாவட்ட கவுன்சிலர் அனிதா முனிராஜ், ஒன்றிய கவுன்சிலர் வெங்கடேஷ், பஞ்., தலைவர் சீனிவாசரெட்டி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ