உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / காவேரிப்பட்டணம் போக்குவரத்தில் மாற்றம் நெரிசலை தவிர்க்க போலீசார் நடவடிக்கை

காவேரிப்பட்டணம் போக்குவரத்தில் மாற்றம் நெரிசலை தவிர்க்க போலீசார் நடவடிக்கை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் நகருக்கு பல்வேறு கிராமங்களில் இருந்து தினமும், பொதுமக்கள், மாணவ, மாணவியர், விவசாயிகள் என பல்வேறு தரப்பினர் வந்து செல்வதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வந்தனர். இதையடுத்து, காவேரிப்பட்டணம் இன்ஸ்பெக்டராக புதிதாக பொறுப்பேற்றுள்ள சரவணன், நேற்று முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்துள்ளார். நகரில் எவ்வாறு போக்குவரத்தை கட்டுப்படுத்துவது என்பது குறித்து, போக்குவரத்து போலீசாருக்கு ஆலோசனை வழங்கினார். அதன்படி, அகரம், வேலம்பட்டி வழியாக வரும் வாகனங்கள் அனைத்தும் இனி, நரிமேடு வழியாகத்தான் ஊருக்குள் வர வேண்டும் என்றும், தாசம்பட்டி மற்றும் சாப்பரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் இனி, ரவி தியேட்டர் வழியாகத்தான் காவேரிப்பட்டணம் நகருக்குள் வர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதனால், கணிசமாக போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்புள்ளதாக, இன்ஸ்பெக்டர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி