உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அதியமான்கோட்டையில்கம்பராமாயண பாராயணம்

அதியமான்கோட்டையில்கம்பராமாயண பாராயணம்

அதியமான்கோட்டையில்கம்பராமாயண பாராயணம் அதியமான்கோட்டை:தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை சென்றாயசுவாமி கோவில் வளாகத்தில், தென்னக பண்பாட்டு மையம், மத்திய அரசு கலாச்சார அமைச்சகம் மற்றும் தர்மபுரி மாவட்ட கம்பன் கழகம் இணைந்து நடத்திய கம்பராமாயண பாராயணம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கம்பன் கழகத் தலைவர் நாகராசன் தலைமை தாங்கினார். செயலாளர் குமரவேல் முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் பரமசிவம் வரவேற்றார். குரல்நெறி பேரவை, அறிவு திருக்கோவில், பிரம்ம ஞான சங்கம், தமிழ் சங்கம் உட்பட பல்வேறு சங்கங்களை சேர்ந்த சான்றோர்கள் பங்கேற்றனர். கம்பராமாயணத்தை பாராயணம் செய்து, 50க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி, மற்றவர்களையும் பாட வைத்து, உரை விளக்கம் அளித்தனர். திருவண்ணாமலை கம்பராமாயண பாராயண குழுவினர் மற் றும் தர்மபுரி தமிழ் சங்கத்தை சேர்ந்த சவுந்தர பாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை