உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கிருஷ்ணகிரியில் கனமழை

கிருஷ்ணகிரியில் கனமழை

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பரவலாக கன மழை பெய்தது.கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், பர்கூர் உள்ளிட்ட பகுதியில் நேற்று முன்தினம் மாலை முதல், துாறலாக இருந்த மழை, இரவு கனமழையாக கொட்டி தீர்த்தது. தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம், டி.சி.ஆர்., சர்க்கிள் அருகே தேங்கி இருந்த மழை நீரை, மின் மோட்டார் மூலம் உறிஞ்சி, அப்புறப்படுத்தும் பணி நடந்தது. இதை, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் பார்வையிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி