| ADDED : மே 12, 2024 12:31 AM
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரைச் சேர்ந்த, 12 வயது மாணவி, அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கிறார். ஓசூர், ராம்நகரைச் சேர்ந்த கலீமுல்லா, 45, என்பவர் ஆட்டோவில் தினமும் பள்ளி சென்று வந்தார். மார்ச், 31ல், கலீமுல்லாவின் மனைவி பர்வீன்தாஜ், மாணவியை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். மாணவி வீடு திரும்பாததால், அவரது தாய் தேடிச் சென்றார்.அங்கு பர்வீன்தாஜ், மாணவியை அடித்துக் கொண்டிருந்தார். விசாரித்தபோது, மார்ச் 23ல் கலீமுல்லா மாணவியை கத்தியைக் காட்டி மிரட்டி, ராம் நகரிலுள்ள ஒரு வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததும், இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதும் தெரிந்தது.மாணவியின் தாய், ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் அளித்த புகாரின்படி, கலீமுல்லா மீது போக்சோ சட்டத்திலும், அவரது மனைவி பர்வீன்தாஜ் மீது மாணவியை தாக்கியதாகவும் வழக்கு பதிந்து, அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.