| ADDED : மே 12, 2024 12:03 PM
கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அடுத்த குள்ளனுாரை சேர்ந்தவர் வேலு, 44. போச்சம்பள்ளியில் எலக்ட்ரிக் கடை நடத்தி வருகிறார். இவர் அதேபகுதியை சேர்ந்த மாதையன், மாரியப்பன் ஆகியோரிடம், 93 சென்ட் நிலத்தை கடந்த, 6 ஆண்டுகளுக்கு முன் வாங்கியுள்ளார். ஆனால் அந்த நிலத்தை அவர்கள் பத்திரப்பதிவு செய்து தரவில்லை. இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட வேலு கடந்த, 10ல் வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. போச்சம்பள்ளி போலீசில் வேலு மனைவி ஜீவா அளித்த புகார்படி, போலீசார் விசாரிக்கின்றனர்.* நேபாள நாட்டை சேர்ந்தவர், 13 வயது சிறுமி; கடந்த, 10 ஆண்டுகளாக, ஓசூர் பழைய ஏ.எஸ்.டி.சி., ஹட்கோ பகுதியில் குடும்பத்துடன் வசிக்கிறார். 5 ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்தார். இச்சிறுமிக்கும், ரோஷன்குமார் என்ற நபருக்கும், இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கம் ஏற்பட்டது. கடந்த, 8 காலை, மாணவி மாயமானார். அவரது தாய் புகாரில், ரோஷன்குமார் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஓசூர் அனைத்து மகளிர் போலீசார், மாயமான சிறுமியை தேடி வருகின்றனர்.* ஊத்தங்கரை அருகேயுள்ள பகுதியை சேர்ந்தவர், 14 வயது சிறுவன். அதே பகுதியிலுள்ள தனியார் பள்ளியில், 8ம் வகுப்பு படித்துள்ளார். கடந்த, 10ல் வீட்டிலிருந்து வெளியில் சென்ற மாணவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. மாணவனின் பெற்றோர் ஊத்தங்கரை போலீசில் அளித்த புகார்படி, போலீசார் விசாரிக்கின்றனர்.