உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ரசாயன நிறமூட்டப்பட்ட8 டன் தர்பூசணி பறிமுதல்

ரசாயன நிறமூட்டப்பட்ட8 டன் தர்பூசணி பறிமுதல்

ரசாயன நிறமூட்டப்பட்ட8 டன் தர்பூசணி பறிமுதல்கிருஷ்ணகிரி:தேன்கனிக்கோட்டையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, 3 பழக்கடைகளில் இருந்து ரசாயன நிறமூட்டப்பட்ட, 8 டன் தர்பூசணி பழங்களை பறிமுதல் செய்தனர்.தற்போது, கோடை காலம் தொடங்கி விட்டதால், உணவு பொருட்கள், பழங்கள் மற்றும் கூல்டிரிங்ஸ் ஆகிய பொருள்கள் பொதுமக்களுக்கு தரம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறதா என, சோதனைகளை மேற்கொள்ள, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் உத்தரவிட்டார். அதன்படி, தேன்கனிக்கோட்டையில் நேற்று ஓசூர் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி மாரியப்பன் தலைமையில் பிரகாஷ், சந்தோஷ் மற்றும் அலுவலர்கள் சோதனை நடத்தினர்.தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி சாலையில் இருந்த மூன்று கடைகளில் விற்பனை செய்த தர்பூசணி பழங்களில், ரசாயன நிறமூட்டிகளை கலந்திருந்தது தெரியவந்தது.இதையடுத்து அந்த கடைகளில் இருந்து, 8 டன் அளவில் தர்பூசணி பழங்களை, அதிகாரிகள் பறிமுதல் செய்து, குழி தோண்டி போட்டு அழித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை