கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, அரசு ஆடவர் கலைக் கல்லுாரியில் வரும், 22ல் மாணவர் சேர்க்கைக்கான, 5ம் கட்ட கலந்தாய்வு நடக்கிறது.இது குறித்து, கல்லுாரி முதல்வர் அனுராதா வெளியிட்டுள்ள அறிக்கை:கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லுாரியில், 2024-2025-ம் கல்வியாண்டிற்கான இளநிலைப் பாடப்பிரிவுகளுக்கு, 5ம் கட்ட கலந்தாய்வு விபரம், www.gacmenkrishnagiri.org என்ற இணையத-ளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பி.எஸ்சி., கணிதம், இயற்-பியல், வேதியியல், கணினி அறிவியல், புள்ளியியல், தாவர-வியல், விலங்கியல், நுண்ணுயிரியல் ஆகிய அனைத்து அறி-வியல் பாடப்பிரிவுகளுக்கும் பி.காம்., பி.பி.ஏ., பி.ஏ., வரலாறு, பொருளியல் ஆகிய கலை பாட பிரிவுகளுக்கும் பி.ஏ., தமிழ்., பி.லிட்., - தமிழ், பி.ஏ.,- ஆங்கிலம் ஆகிய மொழி பாட பிரிவுக-ளுக்கும் ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் விண்ணப்பித்த அனைவருக்கும், ஜூலை 22-ல் கலந்தாய்வு நடக்கிறது. தரவரிசை பட்டியலில் இடம் பெற்ற மாணவர்களுக்கு, மின்னஞ்சல் வாயி-லாக கலந்தாய்வு நாள், நேரம் உள்ளிட்ட விபரங்கள் அனுப்பப்-பட்டுள்ளன.கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள், தேவையான சான்றிதழ்க-ளுடன், கலைப்பிரிவுக்கு, 2,795 ரூபாய், அறிவியல் பிரிவிற்கு, 2,815, கணினி அறிவியல் பிரிவிற்கு, 1,915 ரூபாய் சேர்க்கை கட்-டணமாக செலுத்த வேண்டும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்-கான இட ஒதுக்கீட்டில் அவர்களுக்கு முன்னுரிமை அளித்தும், தகுதியுள்ள பிற இன மாணவர்களுக்கு இனச்சுழற்சி மாற்றம் செய்தும் மதிப்பெண் அடிப்படையில் காலியிடங்கள் நிரப்பப்-படும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.