உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / போலீசாரை மிரட்டியதாக தச்சு தொழிலாளி கைது

போலீசாரை மிரட்டியதாக தச்சு தொழிலாளி கைது

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை ஸ்டேஷன் எஸ்.ஐ., சிவக்குமார் மற்றும் போலீசார், சாரல்தொட்டி பகுதியில் ரோந்து சென்ற போது, அப்பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பது தெரிந்தது. போலீசார், சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முயன்றனர். அப்போது, சூதாட்டத்தில் ஈடுபட்ட சிலர், போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்தனர். மத்திகிரி நவதி பகுதியை சேர்ந்த தச்சு தொழிலாளி கணேஷ் சிங், 51, என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், பேரிகை அடுத்த கர்னப்பள்ளியை சேர்ந்த கூலித்தொழிலாளி முனிராஜ், கர்நாடகா மாநிலம், ஹாசன்பள்ளியை சேர்ந்த தேவராஜ் ஆகிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை