வனத்தில் வீசி சென்ற துப்பாக்கி பறிமுதல்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி வனச்சரக அலுவலர் முனியப்பன் மற்றும் அலுவலர்கள், வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில், 'ஒழிப்போம் நாட்டு துப்பாக்கிகளை, பாதுகாப்போம் யானைகளை' என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர். இதில், அனுமதி பெறாமல் நாட்டுத்துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள் வனப்பகுதியில் குறிப்பிட்ட இடத்தில் போட்டு சென்றால் வழக்குப்பதிவு செய்யப்பட மாட்டாது என அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, என்.தட்டக்கல் வனப்பகுதியில் நாட்டுத்துப்பாக்கி ஒன்றை, பொதுமக்களில் ஒருவர் போட்டு சென்றார். அதை மீட்ட வனத்துறையினர், நாகரசம்பட்டி போலீசில் ஒப்படைத்தனர்.