உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கிருஷ்ணகிரி அரசு மகளிர் கல்லுாரியில் கலந்தாய்வு

கிருஷ்ணகிரி அரசு மகளிர் கல்லுாரியில் கலந்தாய்வு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, அரசு மகளிர் கலைக்கல்லுாரியில், மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவத்தினர், விளையாட்டு வீராங்கனை, தேசிய மாணவர் படை மற்றும் ஆதரவற்ற மாணவியருக்கான முதலாமாண்டு சேர்க்கை கலந்தாய்வு இன்று நடக்கிறது. இதில், விண்ணப்பித்த மாணவியர் தங்கள் மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், ஆதார், வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் அசல், நகலுடன், 5 பாஸ்போர்ட் புகைப்படம் மற்றும் பெற்றோருடன் கலந்து கொள்ள வேண்டும். தேர்வு பெற்றவர்கள் கல்லுாரிக்கு செலுத்த வேண்டிய, 2,575 ரூபாயையும் செலுத்த வேண்டும், என கல்லுாரி முதல்வர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை