உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கள்ளச்சாராய ஒழிப்பு கூட்டம்

கள்ளச்சாராய ஒழிப்பு கூட்டம்

ஓசூர், ஜூன் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தை தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை உட்கோட்ட போலீசார் சார்பில், கள்ளச்சாராய ஒழிப்பு குறித்த கூட்டம் நேற்று நடந்தது. தேன்கனிக்கோட்டை தாலுகா வி.ஏ.ஓ.,க்கள், உதவியாளர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி., சாந்தி தலைமை வகித்து பேசும்போது, கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்கள் புழக்கம் மற்றும் கடத்தல், விற்பனை போன்றவை நடப்பது தெரிந்தால், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க கேட்டுக் கொண்டார். இன்ஸ்பெக்டர் தவமணி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி