| ADDED : மே 10, 2024 11:19 PM
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த ஆலள்ளியை சேர்ந்தவர் ராஜேந்திரன், 58; விவசாயி. இவர், நேற்று காலை, 7:30 மணிக்கு ஆலஹள்ளி - மணியம்பாடி சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டார்.அப்போது, அப்பகுதியில் சுற்றித்திரிந்த ஒற்றை ஆண்யானை, ராஜேந்திரனை விரட்டிச் சென்று, வலது மார்பு, தோள்பட்டை ஆகிய இடங்களில் தந்தத்தால் குத்தியதில் படுகாயமடைந்த அவர், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று மாலை, சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். தேன்கனிக்கோட்டை போலீசார், வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.அதேபோல், ஜார்க்கலட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வெங்கடசாமி, 60, நேற்று முன்தினம் கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது, ஒற்றை யானை தாக்கி படுகாயமடைந்தார். ஒற்றை யானை, தொடர்ந்து மனிதர்களை தாக்கி வருவதால், அதை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட கோரிக்கை எழுந்துள்ளது.