உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மான் வேட்டையாடிய 4 பேருக்கு அபராதம்

மான் வேட்டையாடிய 4 பேருக்கு அபராதம்

ஓசூர்: தேன்கனிக்கோட்டை வனச்சரகர் விஜயன் மற்றும் வன ஊழி-யர்கள் அடங்கிய குழுவினர், கொடகரை அடுத்த கெம்பகரை - ஆனைபெத்தல்லா வனப்பகுதிக்கு இடையே நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர்.அப்போது, இரு பைக்கில் வந்த, 4 பேரை நிறுத்தி சோதனை செய்த போது, 15 கிலோ மான் கறி இருந்தது.விசாரித்த போது, அஞ்செட்டி அருகே கேரட்டியை சேர்ந்த ஆண்-டியப்பன், 51, கண்ணையன், 37, பழனியப்பன், 55, சந்தனப்பள்-ளியை சேர்ந்த அரிநாதன், 39, என்பதும், சுருக்கு கம்பி மூலம், மானை வேட்டையாடி கறியை எடுத்து செல்வதும் தெரிந்தது. அவர்களை பிடித்து, ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் பகான் ஜெகதீஷ் சுதாகர் முன் வனத்துறையினர் நேற்று ஆஜர்ப-டுத்தினர். அவர், 4 பேருக்கும் தலா, 45,000 ரூபாய் அபராதம் விதித்தார். அத்தொகையை அவர்கள் செலுத்தியதால், நேற்று விடுவிக்கப்பட்-டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை