உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஜி.ஹெச்., முன் நிழற்கூடம் திறப்பு

ஜி.ஹெச்., முன் நிழற்கூடம் திறப்பு

ஓசூர்:ஓசூரிலுள்ள ராயக்கோட்டை சாலையில், காரப்பள்ளி அருகே, 100 கோடி ரூபாய் மதிப்பில், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. ஓசூர், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி தாலுகாவிற்கு உட்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள், மருத்துவ சிகிச்சை பெற, தினமும் அரசு மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் மக்கள், சிகிச்சை முடிந்து வீடு திரும்ப, மருத்துவமனை முன், வெயிலில் பஸ்சிற்காக காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. இதையடுத்து, ஓசூர் அரிமா சங்கம் சார்பில், 10 லட்சம் ரூபாய் மதிப்பில், மருத்துவமனை முன் சாலையோரம் நிழற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இதை, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், நேற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.அதேபோல், சின்ன மதகொண்டப்பள்ளியில், கேட்டர் பில்லர் நிறுவன சமூக பொறுப்புணர்வு நிதியிலிருந்து, 40 லட்சம் ரூபாய் மதிப்பில், ஏரியில் இருந்த சீமை கருவேலம் மரங்கள், கட்டட கழிவுகள் அகற்றப்பட்டு, கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ஏரிக்குள் பறவைகளுக்கு தீவுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர், ஏரிக்கரையில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி