உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஓசூர் மாநகராட்சி கல்வி குழு கூட்டம் டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுரை

ஓசூர் மாநகராட்சி கல்வி குழு கூட்டம் டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுரை

ஓசூர்: ஓசூர் மாநகராட்சி கல்விக்குழு கூட்டம், தலைவர் ஸ்ரீதரன் தலை-மையில் நேற்று நடந்தது. மாநகர நல அலுவலர் பிரபாகரன் முன்-னிலை வகித்து பேசுகையில், ''கர்நாடக மாநிலம், பெங்களூ-ருவில் டெங்கு பாதிப்பு உள்ளது. ஓசூர் மக்கள், பெங்களூருக்கு தினமும் சென்று வருகின்றனர். பள்ளி குழந்தைகளுக்கு டெங்கு பரவாமல் தடுக்க, மாநகராட்சி பள்ளிகளில் கொசு மருந்து அடிக்-கிறோம். அதற்கு ஆசிரியர்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். மேலும், மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோரிடம் டெங்கு கொசு புழுக்கள், வீட்டிலுள்ள சுத்தமான நீரில், கொசு வளராத வகையில், பிளீச்சிங் பவுடர் போட்டு சுத்தமாக வைத்து கொ ள்ள, ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,'' என்றார்தொடர்ந்து ஆசிரியர்கள் பேசும் போது, மாநகராட்சி மூலம், பள்-ளிகளில் நியமிக்கப்பட்ட மொத்தம், 130 துாய்மை பணியாளர்க-ளுக்கு மிகவும் தாமதமாக மாத ஊதியம் வழங்கப்படுகிறது. பல மாநகராட்சி பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகள் இல்லை. ஆசிரியர்களை நியமித்து அந்த வகுப்புகளை துவங்க வேண்டும். ஒன்றாம் வகுப்பு முதல், மாணவ, மணவியர் அமர பெஞ்ச், டெஸ்க் வழங்க வேண்டும். கழிவறை, கூடுதல் வகுப்-பறை போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும், என்றனர். அதற்கு பதிலளித்த மாநகராட்சி கல்வி குழுத்தலைவர் ஸ்ரீதரன், ''அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகளுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் பேசி, ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கிறோம்,'' என்றார். செயற்பொறி-யாளர் ராஜாராம், கவுன்சிலர்கள் சிவராம், தேவி மாதேஷ், வட்-டார கல்வி அலுவலர் சதீஷ்குமார் மற்றும் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை