உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சட்ட தன்னார்வ தொண்டர் பணி விண்ணப்பங்கள் வரவேற்பு

சட்ட தன்னார்வ தொண்டர் பணி விண்ணப்பங்கள் வரவேற்பு

கிருஷ்ணகிரி;கிருஷ்ணகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழு தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான, சுமதி சாய் பிரியா தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இயங்கும் கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, ஊத்தங்கரை மற்றும் போச்சம்பள்ளி வட்ட சட்ட பணிகள் குழுக்களுக்கு, சட்ட உதவி மற்றும் சட்ட அறிவை பாமர மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில், சட்ட தன்னார்வ தொண்டர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இப்பணியில் ஆசிரியர்கள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் மூத்த குடிமக்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மருத்துவர்கள், சட்டக் கல்லுாரி மாணவர்கள் (வழக்கறிஞர்களாக பதிவு செய்யும் வரை) சமூக சேவை செய்யும் சமூக ஆர்வலர்கள் (அரசியல் கட்சி சாரா தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சார்ந்தவர்கள்), மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் சமூக தொண்டு புரியும் மகளிர் குழுக்களை சேர்ந்த உறுப்பினர்கள், திருநங்கைகள், அடிப்படை கல்வி தகுதி (கணினி அறிவுடன்) உடைய சேவை மனப்பான்மை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பங்களை, https://krishnagiri.dcourts.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, உரிய ஆவணங்களுடன் மே, 14 மாலை, 5:30 மணிக்குள், பதிவு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு மதிப்பூதியம் தவிர, வேறு சம்பளம் கிடையாது. மேலும் விபரங்களுக்கு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இயங்கி வரும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அல்லது வட்ட சட்டப்பணிகள் குழுக்களை அணுகலாம்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ