உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

ஓசூர்: ஓசூரில், மத்திகிரி மாரியம்மன் கோவில் கும்பாபி ேஷகம் நேற்று நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஐ.டி.ஐ., அருகே மத்திகிரி மாரியம்மன் கோவில் உள்ளது. மத்திகிரி, நவதி, மிடுகரப்பள்ளி, அந்திவாடி உட்பட ஏழ கிராம மக்களுக்கு இக்கோவில் குல தெய்வமாகும். இக்கோவில் கும்பாபி ேஷக விழா கடந்த, 21ல் துவங்கியது. அன்று காலை, 9:30 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், முதல், இரண்டாம் கால யாக பூஜை, நேற்று முன்தினம் மூன்றாம், நான்காம் கால யாக பூஜை, வேதபாராயணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலை, 6:00 மணிக்கு நான்காம் கால யாக வேள்வி, யாத்ரா தானம், கடம் புறப்படுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை