உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கொத்தனார் மரணம் போலீசார் விசாரணை

கொத்தனார் மரணம் போலீசார் விசாரணை

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே திம்மசந்திரம் ஓனி ரோடு பகுதியை சேர்ந்தவர் தம்பிதுரை, 23, கொத்தனார். இவர், நேற்று முன்தினம் தேன்கனிக்கோட்டை மஞ்சுநாத் லேஅவுட் பேஸ் - 2ல் உள்ள விளையாட்டு மைதானத்திற்கு குடிபோதையில் சென்றார்.அங்கு இளைஞர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடினர். அப்போது ஏற்பட்ட தகராறில் தம்பிதுரையை இளைஞர்கள் அடித்ததில், தம்பிதுரை மயங்கி விழுந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரித்தனர். இளைஞர்கள் அடித்ததால் தம்பிதுரை உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்ததால், சந்தேக மரணம் என வழக்கு பதிந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை