உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / உறுப்பினர் சேர்க்கை பா.ஜ., பயிலரங்கம்

உறுப்பினர் சேர்க்கை பா.ஜ., பயிலரங்கம்

உறுப்பினர் சேர்க்கை பா.ஜ., பயிலரங்கம்ஓசூர், ஆக. 25-கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, பா.ஜ., கட்சி சார்பில், ஓசூரிலுள்ள கட்சி அலுவலகத்தில், உறுப்பினர்கள் சேர்க்கை, மாவட்ட பயிலரங்கம் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் நரேந்திரன் மற்றும் தரவு மேம்பாட்டு பிரிவு மாநில தலைவர் மகேஷ்குமார் ஆகியோர், ஓசூர், தளி, வேப்பனஹள்ளி சட்டசபை தொகுதிகளில் அதிகப்படியான உறுப்பினர்களை சேர்ப்பது குறித்தும், வரும் சட்டசபை தேர்தல் பணிகள் பற்றியும் ஆலோசனை வழங்கினர். மாவட்ட பொதுச்செயலாளர்கள் அன்பரசன், விஜயகுமார், மனோகர், பொருளாளர் சீனிவாசன், துணைத்தலைவர்கள் சீனிவாசரெட்டி, முருகன், நாகராஜ், செயலாளர்கள் பிரவீன்குமார், ராஜசேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை