உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கிருஷ்ணகிரியில் இன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம்

கிருஷ்ணகிரியில் இன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள அறிக்கை:கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இன்று(26ம் தேதி) சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம் காலை, 10:00 முதல், 1:00 மணி வரை நடக்கிறது. இச்சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் பிரபல தனியார் நிறுவனம் கலந்து கொண்டு பல்வேறு பணியிடங்க-ளுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். தனியார் துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ள அனைவரும், இதில் கலந்து கொள்ளலாம். முகாமில் தேர்ந்தெடுக்கப்பட்டு தனியார் துறையில் பணியமர்த்தம் செய்யப்படும் வேலைநாடுனர்-களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்பட மாட்டாது. மேலும் விபரங்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது தொலைபேசி எண் 04343 291983 வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அதில் தெரிவித்தள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !