அறிவுசார் மையத்தில் தமிழ் சொற்பொழிவு
அறிவுசார் மையத்தில்தமிழ் சொற்பொழிவுகிருஷ்ணகிரி, ஆக. 25-கிருஷ்ணகிரி, பழையபேட்டை பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள அறிவுசார் மையம் மற்றும் நுாலகத்தில் தமிழ் சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. நகராட்சி தலைவர் பரிதாநவாப் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையாளர் ஸ்டான்லி பாபு முன்னிலை வகித்தார். இதில், கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லுாரி முனைவர் பட்ட ஆய்வாளர் இளந்தமிழன், தமிழின் தற்கால இலக்கியம் குறித்தும், நுால்கள் வாசிப்பின் முக்கியத்துவம் குறித்தும் பேசினார். இதில், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், நகராட்சி கவுன்சிலர்கள், ஊழியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.