உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பைக் திருட முயன்றவர் கைது

பைக் திருட முயன்றவர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த தளிஹள்ளியை சேர்ந்தவர் வெங்கடேசன், 35; இவர் கடந்த, 2ல் கிருஷ்ணகிரி டான்சி வளாகத்திலுள்ள ஹோண்டா பைக் ஷோரூம் முன், தன் பல்சர் பைக்கை நிறுத்தி சென்றார். அங்கு வந்த நபர், மாற்றுச்சாவியை போட்டு பைக்கை திருட முயன்றார். இதை கவனித்த வெங்கடேசன் அவரை வளைத்து பிடித்தார். விசாரணையில் அவர், கிருஷ்ணகிரி பாரதி நகரை சேர்ந்த இம்ரான், 28, என தெரிந்தது. அவரை, கிருஷ்ண-கிரி டவுன் போலீசார் கைது செய்தனர். அதேபோல கடந்த மாதம், 31ல், புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே நிறுத்தியிருந்த ஹீரோ டீலக்ஸ் பைக்கை இம்ரான் திருடியது தெரிந்து, அவர் மீது மேலும் ஒரு வழக்கை போலீசார் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை