உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஓசூர் கோதண்டராம சுவாமி கோவில் தெப்ப உற்சவம்

ஓசூர் கோதண்டராம சுவாமி கோவில் தெப்ப உற்சவம்

ஓசூர்: ஓசூர், நேதாஜி ரோட்டிலுள்ள கோதண்டராமர் சுவாமி கோவில் தெப்ப உற்சவ விழா கடந்த, 11ல் துவங்கியது. அன்று காலை, 81 கலச திருமஞ்சனம், வாஸ்து ஹோமம், 12ல் வேத திவ்ய பிரபந்தம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. தினமும் கோதண்டராம சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு, ராமநாயக்கன் ஏரி எதிரே உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவில் தெப்பக்குளத்தில், கிருஷ்ணகிரி, காங்., - எம்.பி., கோபிநாத் மற்றும் அவரது குடும்பத்தினர் சார்பில், தெப்பல் உற்சவம் நடந்தது. தெப்பக்குளத்தை சுற்றி அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில், 5 முறை உற்சவ மூர்த்தி உலா வந்தார்.எம்.பி., கோபிநாத் உட்பட திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, கோவில் தர்மகர்த்தாக்கள் கல்பனா நீலகண்டன், சுந்தரம், முனிராஜ் மற்றும் அர்ச்சகர் ரகுராமன், ஆகம சர்வசாதகர் கேசவபட்டாச்சாரியர் உட்பட பலர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை