உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பாரூர் பெரிய ஏரியிலிருந்து இன்று முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு

பாரூர் பெரிய ஏரியிலிருந்து இன்று முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை நீர்மட்டம், 48 அடியை எட்டினால், பாசனத்திற்கு வாய்க்காலில் தண்ணீர் திறப்பது வழக்கம். அதன்படி கடந்த, 23ல் அணை நீர்மட்டம், 48 அடியை தாண்டியது.இதனால் முதல்போக சாகுபடிக்கு கே.ஆர்.பி., அணையிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து தமிழக முதல்வர் வரும் ஜூலை, 5ல் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளார். அதற்கு முன்பாக, பாரூர் பெரிய ஏரியிலிருந்து, பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது வழக்கம். அதன்படி, கடந்த, 10ல் பாரூர் பெரிய ஏரியின் முழு கொள்ளளவான, 15.60 அடியை எட்டியது.இதனால் பாரூர் ஏரியிலிருந்து முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி, தமிழக முதல்வர் இன்று (ஜூலை 1) முதல், பாரூர் பெரிய ஏரியில் இருந்து தண்ணீரை திறக்க உத்தரவிட்டுள்ளார். காலை, 9:45 மணிக்கு, கலெக்டர் சரயு, பர்கூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன் ஆகியோர், பாரூர் ஏரியிலிருந்து பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைக்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை பொதுப் பணித்துறையினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை