மேலும் செய்திகள்
உறுப்பினர் அடையாள அட்டை வழங்கல்
31-Aug-2024
ஓசூர்: கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, அ.தி.மு.க., அண்ணா தொழிற்சங்கம் சார்பில், 50ம் ஆண்டு பொன்விழா மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். ஓசூர் அண்ணா நகரிலுள்ள அண்ணாதுரை மற்றும் எம்.ஜி.ஆர்., சிலைக்கு, மேற்கு மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணாரெட்டி மாலை அணிவித்து, ஆட்டோ டிரைவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.ஜெ.பேரவை மாவட்ட செயலாளர் சிட்டி ஜெகதீசன், பகுதி செயலாளர்கள் ராஜூ, வாசுதேவன், மஞ்சுநாத், கவுன்சிலர்கள் குபேரன், தில்ஷாத் முஜிபூர் ரஹ்மான், மாவட்ட கவுன்சிலர் ரவிக்குமார், முன்னாள் கவுன்சிலர் தவமணி உட்பட பலர் பங்கேற்றனர்.
31-Aug-2024