உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஓசூரில் 12,793 வாக்காளர்கள் போலியானவர்கள் என புகார்

ஓசூரில் 12,793 வாக்காளர்கள் போலியானவர்கள் என புகார்

ஓசூர்: ஓசூரில், 12,793 வாக்காளர்கள் போலியானவர்கள் என, சப்-க-லெக்டர் ஆக்ரிதி சேத்தியிடம், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி நேற்று புகார் மனு வழங்கினார்.தமிழகம் முழுவதும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடக்கின்றன. அதன்படி, தமிழக எல்லை தொகுதியான ஓசூரிலும் அதிகாரிகள் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி, கலசபாக்கம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., பன்னீர்செல்வம் மற்றும் கட்சியினர், ஓசூர் சப்-கலெக்டர் ஆக்ரிதி சேத்தியிடம் நேற்று மதியம் மனு ஒன்றை வழங்கினர். தொடர்ந்து, பாலகிருஷ்ணாரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது: ஓசூர் சட்டசபை தொகுதியில் மட்டும், 12,793 வாக்காளர்கள் பட்-டியலில் இருமுறை இடம் பெற்றுள்ளனர். இதுதவிர, போலி வாக்காளர்கள், இறந்தவர்கள் பெயர்கள் வாக்காளர்கள் பட்டி-யலில் உள்ளன. எனவே, போலி வாக்காளர்களை நீக்க வேண்டும். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை பார்த்து, தமிழக முதல்வர் ஸ்டாலின் பயந்து அலறுகிறார். போலி வாக்காளர்களை நீக்க, முதல்வர் பயப்படுகிறார். பீகாரை போல், தமிழகத்தில், அ.தி.மு.க., கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று, இ.பி.எஸ்., தலைமையில் ஜனநாயக அரசு அமைய உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை