பள்ளி பஸ் மீது பட்டாசு வீசிய 13 பேர் கைது
ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த ரெட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் விழா நேற்று முன்தினம் மாலை நடந்தது. அதில், பட்டாசுகளை வெடித்த சிலர், அவ்வழியாக வந்த பள்ளி பஸ் மீது வீசினர். இதில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து, 6 மாணவர்கள் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து சம்பவ இடம் சென்ற கல்லாவி இன்ஸ்பெக்டர் ஜாபர் உசேன் மற்றும் போலீசார் சிலரை விசாரணைக்காக அழைத்து சென்றனர். அப்போது, போலீஸ் வாகனத்தை நிறுத்தி இன்ஸ்பெக்டர் ஜாபர் உசேனை கல்லால் தாக்கியதில் அவர் மண்டை உடைந்தது.இது குறித்து, தனியார் பள்ளி பஸ்சின் டிரைவர் சண்முகம் அளித்த புகார் படி, கல்லாவி போலீசார் ஏ.ரெட்டிப்பட்டியை சேர்ந்த அருண், 27, சம்பத், 55, இளவரசன், 32, பூவரசன், 30, விஜய், 23, லோகேஷ், 27, ஆறுமுகம், 36, மாதையன், 63, மணிகண்டன், 29, கருணாகரன், 35, தினேஷ், 21, கிரி, 19, லோகேஷ், 19, உள்ளிட்ட, 13 பேரை கைது செய்தனர். அதேபோல, இன்ஸ்பெக்டர் ஜாபர் உசேன் தாக்கப்பட்டது தொடர்பாக அவர் அளித்த புகார் படியும், அம்மன் கோவில்பதி டாஸ்மாக்கை அகற்ற கோரி நடந்த சாலை மறியல் குறித்தும் கல்லாவி போலீசார் விசாரித்து வருகின்றனர்.