மேலும் செய்திகள்
300 ஆண்டு பழமையான அனுமன் சிலை கண்டுபிடிப்பு
22-Jan-2025
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகம், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு இணைந்து கெலமங்கலம் அருகே சந்தனப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டது. அதில், 4 அடி உயர பழைய மாரியம்மன் கோவில் சுவரில் இருந்த, 13ம் நுாற்றாண்டைச் சேர்ந்த பூர்வாதராயர்கள் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. இக்கல்வெட்டை படியெடுத்த, ஓய்வுபெற்ற காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது:13ம் நுாற்றாண்டில், மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் இப்பகுதியை ஆண்ட பூர்வாதராயர் வம்சத்தைச் சேர்ந்த தாமத்தாழ்வார், இளையாழ்வாருக்கு இரண்டு 'கண்டகம்' விளையும் நிலத்தை தானமாக அளித்ததை இக்கல்வெட்டு கூறுகிறது. 'கண்டகம்' என்பது, பழந்தமிழர் கையாண்ட ஒரு முகத்தல் அளவை. அதாவது, 4 படி ஒரு வல்லம், 40 வல்லம் ஒரு கண்டகம். அதாவது, 100 ஏக்கர் அளவுக்கு உள்ள கழனியை தானமாக அளித்துள்ளதைக் குறிப்பிடுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
22-Jan-2025