மாற்றுக்கட்சியினர் 150 பேர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி ஒன்றியம் பெத்ததாளாப்பள்ளி பஞ்.,ல் இருந்து, பா.ம.க., மற்றும் த.வெ.க., கட்சியில் இருந்து, சுமதி, ராகுல் தலைமையில், 100க்கும் மேற்பட்டோர் காவேரிப்பட்டணத்தில், அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் முனுசாமி எம்.எல்.ஏ., முன்னிலையில், தங்களை அ.தி.மு.க.,வில் இணைத்துக் கொண்-டனர். கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., உள்பட பலர் உடனிருந்தனர்.கெலமங்கலம் கிழக்கு ஒன்றியத்திலிருந்து, அ.ம.மு.க., முகேஷ், தி.மு.க., மல்லேசன் சதீஷ், பா.ஜ., தேவராஜ் ஆகியோர் தலை-மையில், 50க்கும் மேற்பட்டோர், அ.தி.மு.க., துணை பொதுச் செயலாளர் முனுசாமி எம்.எல்.ஏ., முன்னிலையில் தங்களை, அ.தி.மு.க.,வில் இணைத்துக் கொண்டனர். இவர்களுக்கு, எம்.எல்.ஏ., முனுசாமி, கட்சித் துண்டை அணி-வித்து வாழ்த்து தெரிவித்தார். இதற்கான ஏற்பாடுகளை கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகன் செய்திருந்தார்.