உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ‍வேனில் 2.50 டன் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது

‍வேனில் 2.50 டன் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது

கிருஷ்ணகிரி, டிச. 12-கிருஷ்ணகிரி உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு, இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், எஸ்.ஐ., பெரியசாமி மற்றும் போலீசார் பேரிகை - மாஸ்தி சாலை கே.என்.தொட்டி பஸ் ஸ்டாப் அருகில் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த பிக்கப் வேனை நிறுத்தி சோதனையிட்டதில், 50 கிலோ எடை கொண்ட, 50 சாக்கு பைகளில், 2,500 கிலோ ரேஷன் அரிசி கடத்த முயன்றது தெரிந்தது.விசாரணையில், வேனில் வந்தவர்கள் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சின்னா, 23, சசிகுமார், 30 என்பதும், கர்நாடக மாநிலம் கே.ஜி.எப்.,பிற்கு விற்பனை செய்ய எடுத்து சென்றதும் தெரிந்தது. அவர்களை போலீசார் கைது செய்து, பிக்கப் வேனுடன், ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !