உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / 2 நாட்டுத்துப்பாக்கி பறிமுதல்: தொழிலாளி கைது

2 நாட்டுத்துப்பாக்கி பறிமுதல்: தொழிலாளி கைது

அஞ்செட்டி,ஓசூர் வனக்கோட்டத்தில் உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கிகளை வைத்து சிலர், விலங்கு வேட்டையாடுவதை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், அஞ்செட்டி அருகே வண்ணாத்திப்பட்டி பகுதியில், மரியாளம் கிராமத்தை சேர்ந்த தச்சு தொழிலாளி பசப்பா, 58, உரிமமின்றி 2 நாட்டுத்துப்பாக்கிகளை பதுக்கி வைத்துள்ளதாக, அஞ்செட்டி போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் சோதனை செய்து, 2 நாட்டுத்துப்பாக்கிகளை பறிமுதல் செய்து, பசப்பாவை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை