மேலும் செய்திகள்
மொபட் மீது பைக் மோதல்: வாலிபர் பலி; இருவர் காயம்
02-Nov-2024
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் இருந்து ஓசூருக்கு, 'எம்-சாண்ட்' மணல் ஏற்றிய டிப்பர் லாரி நேற்று காலை, 5:00 மணிக்கு வந்தது. பி.செட்டிப்பள்ளியில் தேன்கனிக்கோட்டை - ஓசூர் சாலையில் வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோர மரத்தில் மோதி வலப்பக்கம் திரும்பியது. அப்போது ஓசூரிலிருந்து தேன்கனிக்கோட்டை சென்ற, 'ஹூண்டாய்' கார் மீது மோதியது.காரில் பயணித்த புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சீனிவாசன் மனைவி கவிதா, 43, நட்ராஜ் என்பவரின் ஒன்றரை வயது மகன் சோம்குகன் பலியாகினர். நடராஜ், 33, அவர் மனைவி அபிராமி, 25, பிரபாகரன், 24, ஆகியோர் படுகாயமடைந்தனர்.அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தலைமறைவான டிப்பர் லாரி டிரைவரை, கெலமங்கலம் போலீசார் தேடி வருகின்றனர்.
02-Nov-2024