மேலும் செய்திகள்
கற்கள் கடத்திய லாரி பறிமுதல்
28-Jun-2025
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி கனிம மற்றும் புவியியல் துறை உதவி புவியியலாளர் வர்ஷா தலைமையிலான அலுவலர்கள், சூளகிரி அடுத்த சப்படியில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை சோதனையிட்டதில், 8 யூனிட் ஜல்லி கற்கள் கடத்த முயன்றது தெரிந்தது. புகார் படி, சூளகிரி போலீசார், லாரியை பறிமுதல் செய்தனர்.மத்துார் அடுத்த கொண்டிரெட்டிப்பட்டி வி.ஏ.ஓ., சங்கர் மற்றும் அதிகாரிகள், ஊத்தங்கரை சாலை, கொடமாண்டப்பட்டியில் ரோந்து சென்றனர். அவ்வழியாக வந்த லாரியை சோதனையிட்டதில், 2 யூனிட் ஜல்லி கடத்த முயன்றது தெரிந்தது. சங்கர் புகார் படி, மத்துார் போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர்.
28-Jun-2025